தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணை:
கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வரும் முக்கிய நபர்கள் அதாவது [விஐபி]களை காவல்துறை அணிவகுப்பு மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு கடந்த 2012 இல் வெளியிட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது. அதேபோல் நிதி ஆணையம், மனித உரிமையாணையும், தேசிய மகளிர் ஆணையம், தேசிய எஸ்.பி, எஸ்.டி ஆணையம், நாடாளுமன்ற குழு, மாநில சட்டப்பேரவை குழு ஆகியோருக்கும் மரியாதை அணிவகுப்பு அளிப்பது என்பது அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இப்போது புதிதாக தமிழக அரசு சில முடிவுகளை எடுத்துள்ளது. குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், சில நேரங்களில் மாநில அரசு எடுக்கும் முடிவு அடிப்படையில் மரியாதை அளிக்க வேண்டும். இவர்களுக்கு எந்த இடத்தில் எவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டும் என்று அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளின் படி முடிவெடுக்கப்படும். இந்த உத்தரவானது மாநகர காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி களும் பொருந்தும் என உறுதி செய்யப்பட்டுள்ளன.
