BREAKING: பெண் குழந்தைக்கு ரூ.50000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

By Soundarya on வைகாசி 19, 2026

Spread the love

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2026 – 27-ம் நிதியாண்டிற்குப் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெண் குழந்தைகளின் நல்வாழ்வை உறுதி செய்யும் நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ₹50,000 நிதியுதவி வழங்கப்படும். அதேசமயம், ஒரு குடும்பத்தில் இரண்டு அல்லது மூன்று பெண் குழந்தைகள் இருந்தால், தலா ₹25,000 வீதம் நிதியுதவித் தொகை டெபாசிட் செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்குப் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான பொதுமக்கள், தேவையான முக்கிய ஆவணங்களுடன் தங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்கள் (E-Sevai Centers) மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது குழந்தையின் பிறப்புச் சான்று, ஆண் வாரிசு இன்மை சான்றிதழ், குடும்ப அட்டை (Ration Card), மற்றும் குடும்ப வருமானச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டியது கட்டாயமாகும் என அரசு அந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.