தமிழகத்தில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைச் சந்திக்க ஆளும் கட்சியான த.வெ.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் நிலுவையில் இருந்த தேர்தல் வழக்குகளுக்கான நீதிமன்றத் தடை முடிவடைய உள்ளதால், விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. 107 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை இன்றி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் மக்கள் பிரச்சினைகளுக்காக எப்போது வேண்டுமானாலும் ஆதரவை விலக்கிக்கொள்ளும் சூழல் உள்ளதால், இந்த 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தங்களது பலத்தை 114 ஆக உயர்த்திக்கொண்டால் மட்டுமே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித சிக்கலுமின்றி ஆட்சியைத் தொடர முடியும் என அக்கட்சி கணக்குப் போடுகிறது.
இதற்கிடையே, சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல் குறித்த முக்கிய கோப்புகள் தன்னிடம் ஆதாரத்துடன் இருப்பதாகவும், அவை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இந்தக் கோப்புகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்க த.வெ.க. திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள நிலையில், இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சிகளை ஆளுங்கட்சி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…