BREAKING: “தமிழக அமைச்சரவையில் விஜய் செய்யும் மாஸ் சம்பவம்”… 1967-க்கு பிறகு நடக்கப்போகும் அந்த வரலாற்றுச் சம்பவம்…!

By Nanthini on வைகாசி 15, 2026

Spread the love

தமிழக அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதர் ஆடை அணிந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறப் போவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது ‘X’ தளத்தில் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கையை திமுக ஏற்க மறுத்த போதிலும், தற்போதைய தேர்தல் முடிவு அதற்கு மாறான மக்கள் தீர்ப்பை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழகத்தை “36 சதவீத கமிஷன்” என்ற ஊழல் அரசியலில் இருந்து விடுவித்து, நேர்மையான மற்றும் தூய்மையான நிர்வாகத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்றும், மக்கள் மாற்றத்தை விரும்புவதையே இந்தச் சூழல் காட்டுவதாகவும் அவர் தனது பதிவில் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.