முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை தற்போதைய முதல்வர் விஜய் ₹350 கோடிக்கு வாங்கப் போவதாக வெளியாகி வரும் தகவல், தமிழக அரசியலிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தற்சமயம் நீலாங்கரையில் வசித்து வரும் முதல்வர் விஜய், தினமும் சுமார் 18.5 கி.மீ தூரம் பயணித்து தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார். இதனால் அவரது பயண வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுவதாக அண்மைக்காலமாகப் பேச்சுகள் எழுந்தன.
இந்த மக்கள் நலன் சார்ந்த புகார்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காகப் பயணத் தூரத்தைக் குறைக்கும் நோக்கோடும், போயஸ் கார்டனில் உள்ள “வேதா நிலையம்” இல்லத்தை விலைக்கு வாங்குவதற்கான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளில் முதல்வர் விஜய் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தற்போதைய நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
