அதிகாரிகளுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்.. 5 நாள் கெடு.. இல்லையெனில் “ஆட்டோமேட்டிக்” சான்றிதழ்.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..!!

By Muthu Mani on ஆனி 11, 2026

Spread the love

2026-இல் பதவியேற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப வசதிகளை கொண்டுவந்துள்ளது. அதன்படி சாதிச் சான்றிதழ், புதிய குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற அத்தியாவசியத் தேவைகள் மக்களுக்குக் காலதாமதமின்றி நேரடியாகக் கிடைப்பதற்காகத் தவெக அரசு புதிய நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய அமைச்சர் செங்கோட்டையன், ஆன்லைனில் சான்றிதழ்களுக்குப் பதிவு செய்த 5 நாட்களுக்குள் அதிகாரிகள் கள ஆய்வு செய்து பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்; ஒருவேளை அதிகாரிகள் தவறினால், ஆன்லைன் மென்பொருள் மூலமாக மனுக்கள் தானாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் லஞ்ச ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும், வரவிருக்கும் பருவமழையை எதிர்கொள்ளப் பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், தமிழக அரசு முன்னெச்சரிக்கையாகக் கோரியிருந்த 1,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்கிவிட்டதால் வெள்ளத் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் தவெக இணைவது குறித்து முதலமைச்சர் விஜய் அவர்களே சரியான நேரத்தில் முடிவெடுப்பார் என்றும், முதல்வர் அடிக்கடி செய்தியாளர்களைச் சந்திக்கத் தேவையில்லை, அவரது மக்கள் நலச் செயல்பாடுகளே பேசும் என்றும், சிறந்த ஆட்சியைத் தருவதற்காகவே முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.