BREAKING: “சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?”… அரசுப் பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவருந்திய CM விஜய்… நெகிழ்ச்சி வீடியோ….!

By Nanthini on புரட்டாதி 22, 2026

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட’ விரிவாக்கத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் கோலாகலமாகத் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பின், எவ்வித ஆடம்பரமுமின்றி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவை அருந்திய முதலமைச்சர், அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுவை மற்றும் ஊட்டச்சத்து குறித்து இன்முகத்துடன் கேட்டறிந்தார். மேலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சி, பள்ளி அனுபவங்கள் மற்றும் அவர்களின் எதிர்கால லட்சியங்கள் குறித்தும் அன்போடு கலந்துரையாடிய முதலமைச்சரின் இந்த எளிமையான அணுகுமுறையும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

https://www.instagram.com/reel/Ddkv_OKJT34/?stkn=MWV1OW0wMm1remIyMA==