இனி ஆக்ஷன் தான்..! அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி தடை… 3 அமைச்சர்களின் வீடியோ சர்ச்சையானதால் பாய்ந்த உத்தரவு – கோட்டையில் பரபரப்பு..!!

By Soundarya on ஆனி 8, 2026

Spread the love

தமிழகத்தில் வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் இடைத்தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக முடிவடையும் வரை, அமைச்சர்கள் யாரும் சமுதாய பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என முதல்வர் ஜோசப் விஜய் அதிரடித் தடை விதித்துள்ளார். அமைச்சர்கள் அனைவரும் தங்களது முழுக்கவனத்தையும் மக்கள் பணியில் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும், தேவையில்லாத எந்தவொரு சர்ச்சைகளிலும் சிக்காமல் கூடுதல் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அண்மையில் அமைச்சர்களான கீர்த்தனா, ஸ்ரீநாத் மற்றும் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரிய அளவில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகின. இந்தச் சூழலில், அரசின் இமேஜிற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் விஜய், அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.