தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களுக்கான தள்ளுபடி தொகையை உயர்த்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய அறிவிப்பின்படி, ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100% முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கியவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் சலுகை மற்றும் விரிவாக்கத்தின் காரணமாக மாநில அரசுக்கு கூடுதலாக ரூ.953 கோடி நிதிச்சுமை ஏற்படும் போதிலும், ஒட்டுமொத்தமாக ரூ.6,720 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதன் மூலம் இலட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவர் என முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.
