BREAKING: சற்றுமுன் தமிழக மக்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு..!

By Nanthini on பங்குனி 12, 2026

Spread the love

மேற்காசியப் போர்ச்சூழலால் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அமைந்துள்ளது. எரிபொருள் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்குத் தான் கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இக்கட்டான சூழலில் மத்திய அரசின் முயற்சிகளுக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும், இப்போர்க்கால சவால்களை ஒற்றுமையுடன் எதிர்கொள்வோம் என்றும் தனது எக்ஸ் (X) தளத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.