தன்னை உத்தமராக்கிக் கொள்ள… பாஜகவின் வாஷிங் மெஷினில் குதித்துள்ளார் இபிஎஸ்.. CM ஸ்டாலின் காட்டம்..!!

By Soundarya on ஐப்பசி 3, 2025

Spread the love

ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேரூந்து நிலையம், பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டிடம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, தங்கச்சிமடத்தில் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பின்பு பேசிய அவர், “தன்னை உத்தமராக்கிக் கொள்ள பாஜகவின் வாஷிங் மெஷினில் குதித்துள்ளார் இபிஎஸ். “யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி உயிர் வாழத் துடிக்கும் ஒட்டுண்ணியாகதான் பாஜக திகழ்கிறது. பாஜகவுக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை கிடையாது. அடுத்தாண்டு தேர்தல் வருகிறது. எனவே கரூரில் அரசியல் ஆதாயம் கிடைக்குமா? யாரையாவது மிரட்டலாமா என பாஜக யோசிக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.