BREAKING: முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலை…. அதிர்ச்சியில் அதிமுக, தவெக…!!

By Devi Ramu on வைகாசி 4, 2026

Spread the love

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக அணிகளுக்கு இடையே நிலவி வந்த நேரடிப் போட்டி, இந்த முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வருகையாலும், சீமானின் நாம் தமிழர் கட்சியின் வளர்ந்து வரும் வாக்கு வங்கியாலும் மும்முனை அல்லது அதற்கு மேற்பட்ட முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். தமிழக கட்சி கழகம் சார்பாக போட்டியிட்ட செங்கோட்டையன் கோபி தொகுதியில் முன்னிலையில் உள்ளார். போடி தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் உள்ளார்.