கரூர் துயர சம்பவம் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கரூரில் நடந்த துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த அரசியல் கட்சித் தலைவரும் தன் தொண்டர் அப்பாவி மக்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள்.
இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும். உயிரிழந்தவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் சரி அவர்கள் நம் தமிழ் உறவுகள். தனிமனிதப் பகைகளை விலக்கி வைத்துவிட்டு மக்களுக்காக சிந்திக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
