“இந்த ஸ்டாலின் தன்மானத்துக்காக நெருப்போடு கூட விளையாடுவான்… ஜாக்கிரதை… வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் கடும் எச்சரிக்கை..!!

Spread the love

வேலூர் மாவட்டம் கந்தனேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அமைச்சர் துரைமுருகன் உட்பட வேலூர் மற்றும் சுற்றுவட்டாரத் தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அவர், “தமிழ்நாட்டின் தன்மானத்தைக் காக்க ஸ்டாலின் எப்போதும் களத்தில் நிற்பான்” என்று முழங்கினார். எதிர்தரப்பினரை எச்சரிக்கும் வகையில், “யாரும் நெருப்போடு விளையாட வேண்டாம்” என்று குறிப்பிட்ட முதல்வர், இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தியா சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் நிலவிய பசி மற்றும் வறுமைச் சூழலை நினைவுகூர்ந்தார். அந்த இக்கட்டான நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கப் பல போராட்டங்கள் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தத் தேர்தல் ஒரு மிகப்பெரிய களமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கி, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் தன்மானத்திற்கும் வலுசேர்க்க வேண்டும் என அவர் தனது உரையில் வேண்டுகோள் விடுத்தார்.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

7 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

7 மணத்தியாலங்கள் ago