பெங்களூரு விமான நிலையத்திலுள்ள ‘டேஸ்ட் ஆஃப் இந்தியா’ உணவகத்தில் சைவ பிரியாணி ஆர்டர் செய்த குடும்பத்தினருக்கு அதில் சிக்கன் துண்டுகள் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தின் 1-வது முனையத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால், குடும்பத்தினருக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
கடும் சைவ உணவு முறையைப் பின்பற்றும் அக்குடும்பத்தினர், உணவை உட்கொள்ளும்போது அதில் சிக்கன் துண்டுகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, குழந்தைகளும் இதனை அறியாமல் சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், இது தங்களது மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
https://twitter.com/PiyushpaviA/status/2116266209964642539/video/2
இதனைத் தொடர்ந்து, உணவகத்தின் மேலாளர் மற்றும் சமையல்காரரிடம் உரிய விளக்கம் கோரியதுடன், இது குறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும், சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
