அப்படிப்போடு டபுள் டக்கர்..! “இனி குளு குளு பயணம்” சென்னையில் முதன்முறையாக ஆக-11 முதல்… பயணிகளுக்கு வெளியான சூப்பர் நியூஸ்..!!

By Meena on ஆவணி 8, 2025

Spread the love

சென்னையில் முதன் முறையாக குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்து சேவை திங்கள்கிழமை ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் முதல் தொடங்கப்படும் என மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பிரபு ஷங்கர் கூறியுள்ளார். டீசலில் இயங்கி வரும் பேருந்துகளுக்கு இடையே, சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் இருக்க இயற்கை எரிவாயு மற்றும் மின்சார போக்குவரத்துகளை இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதனையடுத்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 625 மின்சார பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் இயக்க முடிவு செய்துள்ளனர். அடுத்ததாக பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து 55 குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளையும், 80 சாதாரண மின்சார பேருந்துகளையும் இயக்க முடிவு செய்துள்ளனர். வரும் திங்கள்கிழமை அன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இந்தப் பேருந்துகளின் சேவை தொடங்கப்படும். அதன் பிறகு பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.