மொத்த சென்னையும் நாறிக்கிட்டு இருக்கு.. திமுக துரோகத்தின் விளைவுதான் இது.. கொந்தளித்த அன்புமணி…!

Spread the love

பாமகவின் பொதுக்குழு கூட்டத்தை நாளை மறுநாள் அன்புமணி கூட்டுவதாக அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், சென்னை ராயபுரம், திருவிக நகர் ஆகிய இடங்களில், குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து, துப்புரவு பணியாளர்கள் தங்களது பணிக்கு நிலைப்பு வழங்க வலியுறுத்தி 7  நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கொள்ளும் போராட்டத்தால் பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசிகிறது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசு எவ்விதமான நடவடிக்கையும்  எடுக்கவில்லை என கண்டித்தார்.

சென்னை மாநகரில் உள்ள 15 மண்டலங்களில், இரு மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், டெல்லி எம்.எஸ்.டபிள்யூ சொல்யூஷன் லிமிடெட்(Delhi MSW Solutions ltd) என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.இவ்விரு மண்டலங்களிலும் 5180 பணியாளர்கள் பணியாற்றினர். அதில் நிரந்தர பணியாளர்கள் மட்டும் அம்பத்தூர் மண்டலத்திற்கு மாற்றப்பட்டனர். பிற தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி பணி நீக்கம் செய்த தூய்மை பணியாளர்களை, டெல்லி எம்.எஸ்.டபிள்யூ சொல்யூஷன் லிமிடெட் என்ற  பணியில் சேரும்படி கட்டாயப் படுத்தப்படுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற வரும் நிலையில், தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் இன்னும் அதன் பணியை தொடங்கவில்லை. அந்நிறுவனத்தில் போதிய தூய்மை பணியாளர்கள் இல்லாத காரணத்தால், 7 நாட்களுக்கு மேலாக முகப்பேர், நொளம்பூர், நுங்கம்பாக்கம், பெரம்பூர் நெடுஞ்சாலை, சூளை மெயின் ரோடு, சாந்தி காலனி 4வது அவென்யூ மற்றும் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் சாலையிலும் குப்பைகள் அகற்றாமல் துர்நாற்றம் வீசுகிறது. தெருவேங்கும் குப்பைகள் மழை போல் குவிந்து கிடப்பதால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை பெரிது படுத்தாத சென்னை மாநகராட்சி, இந்த ஒப்பந்தத்தில் கிடைக்கப்படும் ரூ.2300 கோடியில்  எந்த வகையில் பயன் அடையலாம் என்று கணக்கு போடுவதில் மட்டும் குறியாக உள்ளனர்.

தூய்மை பணியாளர்களின் இப்போராட்டம் நியாயமானது என்றாலும், அதை நிறைவேற்ற திமுக அரசு முன் வரவில்லை. தூய்மை பணியாளர்கள், சென்னை மாநகராட்சியின் கீழ் பணியாற்றி வரும் பொழுது, தினசரி ரூபாய் 700 வீதம் மாதம் 21,000 ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் இப்பொழுது தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தால், அவர்களுக்கு மாதம் 15 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு இது போதுமான ஊதியம் அல்ல.

தூய்மை பணியாளர்கள் இனியும், ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்ற முடியாது. அவர்களை பணிநிலைப்பு செய்தால், மனநிறைவுடனும் ஓரளவு பொருள் நிறைவுடனும் பணியாற்றுவார்கள். கடந்த அதிமுக ஆட்சியில், 11 மண்டலங்களில்  குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால், இப்பொழுது மீதமுள்ள மண்டலங்கள் தனியாரிடம் நாங்கள் ஒப்படைக்கிறோம் என்று தமிழக அரசு கூறும் காரணங்கள் ஏற்க முடியாதவை. கொரோனா பெருந்தொற்று மற்றும் பேரிடர் காலங்களில் தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல்  பணியாற்றினர்.

2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், தனியாரிடம் தூய்மை பணி வழங்கப்பட்டதால் 700 தூய்மை பணியாளர்கள் நீக்கப்பட்டன. அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் 90% பட்டியலினத்தவர் என்பதால் அவரை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று கண்டித்தார். இப்பொழுது அவருக்கு அதிகாரம் என்ற போதை கண்ணை மறைப்பதால், பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பட்டியலினத்தவர் என்ற உண்மை அவருக்கு தெரியவில்லை போலிருக்கிறது. 2021 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் தற்காலிக தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணிநிலைப் செய்யப்படுவர் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மறந்துவிட்டார். அப்படி செய்திருந்தால் அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கும்.

சொன்னதை செய்யாமல் திமுக செய்த துரோகத்தின் விளைவு தான் தூய்மை பணியாளர்கள் வேலை இழந்து வருத்தத்தில் வாடிக் கொண்டிருக்கின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு உண்மையாகவே தூய்மை பணியாளர்கள் மீதும்,பட்டியலினத்தவர் மீதும் அக்கறை இருந்தால் பணி நீக்கம் செய்யும் ஆணையை ரத்து செய்து, மாறாக தற்காலிக தூய்மை பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

Srimathi

Recent Posts

30 வருட பகைக்கு பழிவாங்கலா?… வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… ஸ்கூட்டரில் இழுத்து வந்து கொடூரம்… பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள்…!!

குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…

9 minutes ago

1930-ல் கட்டப்பட்ட கட்டிடம்… நொடியில் மாறிய தலையெழுத்து… தரைமட்டமான 96 ஆண்டுகால கட்டிடம்… நியூயார்க் கட்டிட விபத்தில் நடந்தது என்ன?…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…

15 minutes ago

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

2 மணத்தியாலங்கள் ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

2 மணத்தியாலங்கள் ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

2 மணத்தியாலங்கள் ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

2 மணத்தியாலங்கள் ago