“வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை… களத்தில் இறங்கிய 8 அமைச்சர்கள்”…. முதல்வர் விஜயின் அதிரடி மாஸ்டர் பிளான்….!

By Nanthini on ஐப்பசி 18, 2026

Spread the love

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வட மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் குறுகிய நேரத்தில் பெய்த அதிகனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

   

வெள்ள நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களையும் ஒருங்கிணைத்து கண்காணிக்க 8 பொறுப்பு அமைச்சர்களை முதலமைச்சர் விஜய் அதிரடியாக நியமித்துள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த அமைச்சர்கள் குழுவினர், உடனடியாகத் தாங்கள் பொறுப்பேற்றுள்ள மண்டலங்களுக்கு நேரில் சென்று களப்பணிகளை முடுக்கிவிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வெளியூர்களில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள் அனைவரையும் உடனடியாகச் சென்னைக்குத் திரும்பி களமிறங்கிப் பணியாற்றும்படியும் அவர் பிறப்பித்துள்ளார்.

   

ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்; அதன்படி, திருவொற்றியூர் மற்றும் மணலிக்கு ரமேஷ், தண்டையார்பேட்டை மற்றும் மாதவரத்திற்கு லோகேஷ் தமிழ்செல்வன், ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகருக்கு அருண்ராஜ் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அண்ணாநகர், தேனாம்பேட்டை, அம்பத்தூர் பகுதிகளுக்கு விஜய் பாலாஜியும், வளசரவாக்கம் மற்றும் கோடம்பாக்கத்திற்கு பிரபுவும், ஆலந்தூர் மற்றும் அடையாறுக்கு பார்த்திபனும், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூருக்கு விக்னேஷும் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

 

சென்னை மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண்களும் வெளியிடப்பட்டு, தேங்கியுள்ள நீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சரின் இந்த நேரடித் தலையீடு மற்றும் அமைச்சர்களின் தீவிர களப்பணிகளால் மழைநீர் வடிகால் மற்றும் நிவாரணப் பணிகள் வேகம் எடுத்துள்ளதோடு, பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தடையின்றி நடைபெற்று வருகின்றன.