சென்னை எழும்பூர் மருத்துவமனையில் கதறிய பெற்றோர்….. இரண்டரை வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்… சிக்கிய பிரபல கட்சி நிர்வாகி…. பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 27, 2026

Spread the love

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு, கடந்த 15-ஆம் தேதி திடீரென காய்ச்சல் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அச்சிறுமி மிகக் கொடூரமான முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன பெற்றோர், உடனடியாக எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

   

காவல்துறையினரின் விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் தேசிங்கு என்பவரின் மகன் ரஞ்சித் (36) என்பவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சம்பவத்தன்று ரஞ்சித்தின் அண்ணன் மகள்களுடன் விளையாடுவதற்காகச் சென்ற குழந்தையை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து ரஞ்சித் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

   

கைது செய்யப்பட்ட ரஞ்சித்திடம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டபோது, கழிவறைக்குச் சென்ற அவர் எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

தமிழக வெற்றிக் கழக நிர்வாகி எனக் கூறப்படும் ரஞ்சித் மீது இத்தகைய கொடூர குற்றச்சாட்டு எழுந்துள்ளதும், அண்மைக் காலமாக அக்கட்சியின் நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதும் பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.