“2 குழந்தைகளின் தாய்.. ஏற்கனவே அறுவை சிகிச்சை”… நகைக்கடை வாலிபரை வளைத்துப் போட்ட ‘கல்யாண ராணி’…. செங்கல்பட்டில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

By Nanthini on மாசி 27, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் விக்ரமன், நகைக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த பெற்றோர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாயமான விக்ரமனை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் திடீரென ஒரு பெண்ணுடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும் கூறி அவர் போலீசாரை அதிர வைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், விக்ரமனுடன் வந்த விஜயலட்சுமி என்ற பெண், தனது கடந்த கால வாழ்க்கையை முழுமையாக மறைத்து வாலிபரை வலையில் வீழ்த்தியது வெளிச்சத்திற்கு வந்தது. விஜயலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதையும், அந்த உண்மையைச் சொல்லாமல் விக்ரமனைத் திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது. மேலும், தனக்கு இனி குழந்தைகள் வேண்டாம் என அவர் ஏற்கனவே குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட விவரத்தையும் மறைத்து விக்ரமனை ஏமாற்றியது விசாரணையில் அம்பலமானது.

   

இந்தத் தகவலைக் கேட்டு விக்ரமனின் பெற்றோர் காவல் நிலையத்திலேயே கதறி அழுதனர். “தன் மகனுக்கு ஒரு வாரிசு கூட இல்லாமல், மற்றவர் குழந்தைகளை வளர்க்கும் நிலைக்குத் தள்ளிவிட்டாளே” என அவர்கள் ஆக்ரோஷமாகவும் வேதனையுடனும் புலம்பினர். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாத விஜயலட்சுமி, எவ்விதக் கூச்சமுமின்றி விக்ரமனின் கையைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து அழைத்துச் சென்றார். ஒரு மாத காலப் பழக்கத்தில் வாலிபரின் வாழ்க்கையைச் சீரழித்த இந்தப் பெண்ணின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.