பிரியா சிங் என்பவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில், ‘ஹோல் ஃபார்ம்’ (Whole Farm) நிறுவனம் ஆரோக்கியம் என்ற பெயரில் மக்களுக்கு விஷத்தை விற்பனை செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நபர் ஒருவர் ‘பிளிங்கிட்’ (Blinkit) செயலி மூலம் அந்த நிறுவனத்தின் வறுத்த மூக்கடலையை (Roasted Chickpeas) ஆர்டர் செய்துள்ளார். அதன் பாக்கெட்டில் உள்ள மூலப்பொருள் பட்டியலில் வெறும் ‘மூக்கடலை’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பொருளைத் திறந்து பார்த்தபோது, அது முழுவதும் செயற்கை நிறமூட்டிகள் (Color) சேர்க்கப்பட்டு ஆபத்தான முறையில் காட்சியளித்துள்ளது. இதைக் காட்டும் வீடியோ பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இந்த ‘ஹோல் ஃபார்ம்’ நிறுவனத்தின் மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இத்தகைய நிறுவனங்களின் பார்வையில் மனித உயிர்களுக்கு எந்தவிதமான மதிப்பும் இல்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுவதாகவும், லாபத்திற்காக மக்களின் உயிருக்குக் கேடு விளைவிக்கும் விஷத்தை விற்கிறார்கள் என்றும் அவர் தனது பதிவில் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
