விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு போட்டியாக சன் டிவி டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை தொடங்கியது. இந்த நிலையில் விஜய் டிவியில் வேலை பார்த்த வெங்கடேஷ் பட் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார்.
எளிமையான சமையல் முதல் கடினமான சமையல் வரை இவருக்கு அத்துப்படி. குக் வித் கோமாளி நான்கு சீசன்களில் நடுவராக இருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். சமீபத்தில் வெங்கடேஷ் பட் சித்ரா லட்சுமனனுடனான பேட்டியில் கூறியதாவது, எனக்கும் சன் டிவிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் தான் இருந்தேன்.
மீடியா மேசன் நிறுவனம் கருத்து வேறுபாடு காரணமாக விஜய் டிவியில் இருந்து வெளியேறியது. அதனால் நானும் அவர்களோடு வர வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஏனென்றால் அவர்களிடம் தான் முழுமையான சுதந்திரம் கிடைக்கிறது. அவர்கள் இருக்கும் இடத்திற்கு நானும் வந்துவிட்டேன். நான் மீடியா மேசன் கீழ் வேலை பார்க்கும் நபர்.
சொல்லப்போனால் நான் விஜய் டிவியில் வாங்கிய சம்பளத்தை விட சன் டிவியில் குறைய சம்பளம் தான் கொடுக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கும் சன் டிவிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களிடம் நான் யாரென்று கேட்டால் கூட தெரியுமா என்று தெரியவில்லை. அந்த டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை மீடியா மேசன் நிறுவனம் குறிப்பிட்ட அந்த நேரத்தை வாங்கி அவர்களே சொந்த புரொடக்ஷன் மூலம் நடத்துகிறார்கள் என வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.