BREAKING: அடுத்த அதிர்ச்சி… சற்றுமுன் பத்மஸ்ரீ புகழ் செஃப் தாமு காலமானார்…. கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்….!

By Nanthini on ஐப்பசி 25, 2026

Spread the love

புகழ்பெற்ற சமையல் கலைஞரும், தமிழ் சின்னத்திரையின் முன்னணி பிரபலமுமான ‘செஃப்’ தாமு உடல்நலக் குறைவால் இன்று காலமானார். பல்வேறு தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் நடுவராகப் பங்கேற்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர். சமையல் கலையை சாமானிய மக்களிடமும் எளிமையாகக் கொண்டு சேர்த்த பெருமைக்குரிய இவர், அண்மைக்காலமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது.

சமையல் துறையில் தனது அசாத்திய திறமையால் பல சர்வதேச சாதனைகளைப் படைத்த செஃப் தாமு, தொடர்ந்து பல மணி நேரம் சமையல் செய்து கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தார். அவரது மறைவுச் செய்தி தமிழ் தொலைக்காட்சி உலகம், திரைத்துறை மற்றும் சமையல் ஆர்வலர்கள் இடையே மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குப் பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும், பொதுமக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.