கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகரைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் அவரது தோழிக்கு நேர்ந்த சம்பவம், தமிழகப் பெண்களின் துணிச்சலுக்குச் சான்றாக அமைந்துள்ளது. சிதம்பரம் நகரிலிருந்து தங்கள் இருசக்கர வாகனத்தில் ரயில்வே மேம்பாலம் வழியாக வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த இவர்களை, எதிரே வந்த இரண்டு இளைஞர்கள் ஆபாசமாகவும், முகம் சுளிக்கும் வகையிலும் வர்ணித்துப் பேசியுள்ளனர். பொதுவாக இதுபோன்ற சூழல்களில் பெண்கள் அச்சத்திலோ அல்லது தயக்கத்திலோ கடந்து செல்வது வழக்கம். ஆனால், ஆர்த்தியும் அவரது தோழியும் அந்த அவமானத்தை அமைதியாக ஏற்கும் முடிவில் இல்லை.
தங்களை இழிவாகப் பேசிய இளைஞர்களை விடக்கூடாது என்ற நோக்கில், அந்தப் பெண்கள் உடனடியாக தங்கள் வாகனத்தைத் திருப்பி அவர்களைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் அருகே அந்த இளைஞர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது, அவர்களை மடக்கிப் பிடித்த பெண்கள், அங்கேயே வைத்து சரமாரியாகத் தர்ம அடி கொடுத்தனர். “உன் வீட்டுப் பெண்களை இப்படித்தான் பேசுவாயா?” என்று ஆவேசமாகக் கேட்டு அவர்கள் புரட்டி எடுத்த சம்பவம், அங்கிருந்த பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
இந்த அதிரடி நடவடிக்கை குறித்துப் பேசிய ஆர்த்தி, “நாங்கள் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு மகிழ்ச்சியாகத் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது அந்த இளைஞர்கள் வாய் கூசும் வகையில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். அவர்களை அப்படியே விட்டுவிட்டால் மற்ற பெண்களுக்கும் இதே நிலையை ஏற்படுத்துவார்கள் என்பதால் துணிச்சலாகத் தட்டிக் கேட்டோம். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” எனத் தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்தும் நபர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்தது.
சர்வதேச மகளிர் தினம் நெருங்கி வரும் நிலையில், ஆர்த்தியின் இந்தத் துணிச்சல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “பெண்கள் இத்தகைய இழிவான விமர்சனங்களைக் கடந்து செல்லாமல், கட்டாயமாகத் தட்டிக் கேட்க வேண்டும். துணிச்சலே நமக்கான பாதுகாப்பு” என்று அவர் விடுத்த அழைப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி, ஈவ் டீசிங் செய்யும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…