தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

By Soundarya on ஆனி 23, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் செயல்பட்டு வரும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபையில் கடுமையான இடநெருக்கடி நிலவி வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளுக்குப் போதிய வாகன நிறுத்துமிட வசதி இல்லாததாலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும் இந்த புதிய இடமாற்றப் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில், முட்டுக்காடு பகுதியில் சுமார் 38 ஏக்கர் பரப்பளவில் 535 கோடி ரூபாய் உலகத்தரம் வாய்ந்த மதிப்பீட்டில் ‘கலைஞர் சர்வதேச மாநாட்டு மையம்’ கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் 5,000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட மாநாட்டு அரங்கமும், ஒரே நேரத்தில் 10,000 பார்வையாளர்கள் பங்கேற்கக்கூடிய கண்காட்சி அரங்கமும் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, கட்டுமானத்தில் உள்ள இந்த மாநாட்டு மையத்தையே புதிய சட்டசபை வளாகமாக மாற்றியமைக்க ஆலோசித்து வருகிறது.

   

இந்த சர்வதேச மாநாட்டு மையத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இந்த மையத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாகவே தமிழக சட்டசபையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்து வரும் நிலையில், இந்த புதிய திட்டம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது