அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியைப் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும் சி.வி. சண்முகம் தரப்பிற்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று இரவு சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இணைந்து எடுத்துள்ள இந்த முக்கிய முடிவு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சி.வி. சண்முகம் தரப்பைச் சமாதானப்படுத்த இபிஎஸ் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், உட்கட்சிப் பூசல் வெடித்து அதிமுக மீண்டும் இரண்டாக உடையும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
