சந்திரபாபு தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகர், நகைச்சுவை நடிகர், பின்னணி பாடகர், திரைப்பட இயக்குனர் மற்றும் நடன கலைஞர் ஆவார். 1950 களிலிருந்து 70 வரை மிகவும் பிரபலம் ஆன நடிகர்களில் ஒருவராக இருந்தார் சந்திரபாபு. தூத்துக்குடியில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த சந்திரபாபு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் சென்னைக்கு வந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் பனிமயதாஸ் சந்திரபாபு ரோட்டரிக்ஸ் என்பதாகும்.
தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி சினிமாவில் நடிக்க வந்த சந்திரபாபு நடிகர்கள் ஸ்ரீராம், பி ஆர் பந்தலூ அவர்கள் மூலம் டி ஆர் மகாலிங்கம் ஆகியோருடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1947 ஆம் ஆண்டு அமராவதி என்ற திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். நடிக்க வந்த ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டார் சந்திரபாபு. பட வாய்ப்புகளை தேடி அலைந்தார். பட்டினி கிடந்தார். ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்று ஜெமினி ஸ்டுடியோவின் கேண்டினில் செப்பு சல்பேட் படிகங்களை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் சந்திரபாபு.
அப்போது இவரின் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிபதி அவரது நடிப்புத்திறனை காட்ட சொன்னார். ஷேக்ஸ்பியரின் மோனலாகை அற்புதமாக நடித்துக் காட்டியதால் நீதிபதி ஈர்க்கப்பட்டு அவரை விடுதலை செய்தார். சந்திரபாபு தற்கொலைக்கு முயன்றபோது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர் தான் ஜெமினி கணேசன். இவரின் இந்த செயல்களை அறிந்த வாசன் மூன்று பிள்ளைகள் என்ற திரைப்படத்தில் சந்திரபாபுவுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கினார். அதற்குப் பிறகு நல்ல வாய்ப்புகளை பெற்ற சந்திரபாபு பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
MGR தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பிரபல நடிகர். பல நடிகர்டன் நடித்து இருப்பவர் MGR. அப்படி சந்திரபாபு குலேபகாவலி இந்த திரைப்படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்த போது MGRரை கிண்டல் அடித்து விட்டார் சந்திரபாபு அந்த சம்பவத்தை பற்றி இனி காண்போம்.
குலேபகாவலி படத்தில் புலியை வைத்து ஒரு காட்சியை படமாக்கப்பட்டது. அப்போது சந்திரபாபு MGR புலியுடன் சண்டையிட ஆயத்தமானதை பார்த்து புலியின் பயிற்சியாளரிடம் என்னப்பா MGR புலியுடன் சண்டையிட போகிறாரா என்று கேட்டிருக்கிறார் சந்திரபாபு. உடனே அந்த புலி பயிற்சியாளர் ஆமா MGR ஐயாவுக்கு புலியை நல்லா தெரியும் அப்படின்னு சொல்லி இருக்கிறார்.
உடனே சந்திரபாபு MGRக்கு புலியை நல்லா தெரியும் ஆனா புலிக்கு MGR தெரியுமாங்கறது தான் இங்க விஷயம் அப்படின்னு சொல்லி பேசி இருக்கிறார். உடனே அங்கு வந்த MGR பயப்படாத பாபு அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல அப்படின்னு கூறி அசால்டாக அந்த புலியுடன் நடித்து முடித்து வந்தாராம். இப்படி பன்முகத் திறமையும் சாதூரியத்தையும் சாமர்த்தியத்தையும் கொண்டவர் MGR .