#image_title
சிவாஜி கணேசனுக்கு இணையாக வைத்து போற்றப்பட்ட நடிகையர் திலகம் சாவித்ரி 50, 60களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்தார். தன்னுடன் நடித்த நடிகரான ஜெமினி கணேசனை ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆனதும் தெரிந்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.
ஒரு கட்டத்தில் ஜெமினி கணேசனின் மார்க்கெட்டே டல்லடித்த போதும் புகழின் உச்சியில் இருந்தார் சாவித்ரி. ஆனால் இவரின் கடைசி காலத்தில் கடனில் சிக்கி கஷ்டப்பட்டு உயிரிழந்தார். முதன்முதலில் கார் வாங்கிய ஹீரோயின், வீட்டில் நீச்சல் குளம் வைத்து கட்டிய நடிகை என்று திரையுலகை திரும்பி பார்க்க வைத்த சாவித்ரி படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் என அகலக்கால் வைத்து கையை சுட்டுக்கொண்டார்.
சாவித்ரியின் இந்த முயற்சிகளால் அவருக்கும் அவரது காதல் கணவரான ஜெமினி கணேசனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்து இருவரும் தனித்தனியே வசிக்க ஆரம்பித்தனர். அப்போது கடுமையான மன உளைச்சலில் இருந்த சாவித்ரி குடிப்பழக்கத்துக்கு ஆளானார்.
அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்தவர் சந்திரபாபு. அவருக்கும் அதிகமாக குடிப்பழக்கம் இருந்ததால் இருவரும் இணைந்து ஒன்றாக குடிக்க ஆரம்பித்துள்ளனர். தன்னை விட்டு அனைத்து உறவுகளும் பிரிந்து போன நிலையிலும் சந்திரபாபு மட்டும் ஆதரவாக இருப்பதால் அவர் மேல் அதிக பிரியத்தோடு இருந்துள்ளார். இருவருக்கும் இடையே அன்பை தாண்டிய ஒரு உறவு இருப்பதாக அப்போதே கிசுகிசுக்கப்பட்டது.
இந்த உறவு காரணமாக திரைத்துறையில் அண்ணன் தம்பி போல நட்பாக பழகி வந்த ஜெமினி கணேசன் –சந்திரபாபு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜெமினி கணேசன் தன்ன்னுடைய மனைவியான சாவித்ரியைப் பார்க்க அவர் வீட்டினுள் செல்வதற்கே சந்திரபாபுவிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
அதீத குடிப்பழக்கம் காரணமாக சந்திரபாபு தன்னுடைய 45 ஆவது வயதிலேயே இறந்துவிட்டார். அதுபோல சாவித்ரியும் நீண்ட நாள் நோயாளியாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கோமாவுக்கு சென்று 1980 களில் உயிரிழந்தார்
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…