சட்டங்களை மதிக்காத தவெக அரசு… ரகசியத்தை உடைக்கச் சொல்லி முதல்வர் விஜய்க்கு… திமுக முன்னாள் அமைச்சர் அதிரடி சவால்… பரபரக்கும் தமிழக அரசியல்…!!

Spread the love

முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தற்போதைய தவெக தலைமையிலான தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காகத் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் படை’ என்பது பெயரளவிற்கும், கண் துடைப்பிற்குமே உருவாக்கப்பட்டுள்ளது என்று சாடிய அவர், அந்தப் படையில் உள்ள பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், ஏழை எளிய மக்களுக்காக நடத்தப்படும் அம்மா உணவகப் பொருட்கள் வெளிச்சந்தையில் விற்கப்படுவதைக் கண்டித்ததோடு, இது நகைச்சுவைக்குரிய ஆட்சியாக நடைபெறுகிறது என்றும், இதில் ஒரு துறையின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த அமைச்சர்களை விட மற்றவர்களே அதிகம் பேசி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தவெக அரசு சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கை ஒரு ‘வெற்று அறிக்கை’ என்று குறிப்பிட்ட கீதா ஜீவன், கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களால் தான் வருவாயும் மின் உற்பத்தியும் அதிகரித்தன என்றார். தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கு ரூ. 2500, 6 இலவச சிலிண்டர்கள், மற்றும் இளைஞர்களுக்கான ரூ. 4000 உதவித்தொகை போன்றவற்றை எப்போது வழங்கப் போகிறது என்று மக்கள் கேட்பார்கள் என்பதால், அதிலிருந்து தப்பிக்கவே இந்த வெற்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று விமர்சித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது நிதிநிலை குறித்து ரகசியம் வைத்துள்ளதாகக் கூறிய முதல்வர் விஜய், தற்போது அந்த ரகசியத்தை மக்களுக்கு உடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், நிஜத்தை அறியாமல் ரீல்ஸ் எடுப்பவர்களும், சூட்டிங் எடுப்பவர்களும், நடித்தே பழகியவர்களும் தமிழ்நாட்டை எந்த நிலைக்குக் கொண்டு செல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை என தவெக தலைமையைச் சாடினார். தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்பது சந்தேகமே என்று கூறிய அவர், கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக எப்போதும் முதல் களத்தில் நிற்பது திமுக தான் என்று பெருமிதம் தெரிவித்தார். இறுதியில், அதிமுகவினர் திமுகவிற்கு வர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு, அவர் “நோ கமெண்ட்ஸ்” எனக் கூறி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Swetha

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

5 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

5 மணத்தியாலங்கள் ago