அமெரிக்காவில் ஒரு கப் டீ ரூ.900-ஆ..? பால்காரர் கொடுத்த மாஸ் பிசினஸ் ஐடியா… நெட்டிசன்களைக் கவர்ந்த வைரல் வீடியோ..!!

Spread the love

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் ‘சாய் காய்’ என்றழைக்கப்படும் இந்தியத் தொழிலதிபர் பிரபாகர் பிரசாத், பீகாரில் உள்ள தனது உள்ளூர் பால்காரரிடம் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கலிபோர்னியாவில் ஒரு லிட்டர் பாலின் விலை இந்திய மதிப்பில் சுமார் ₹450 என்றும், அங்குக் ஒரு கப் டீயின் விலை ₹900 என்றும் பிரபாகர் பிரசாத் கூறியுள்ளார். இதைக் கேட்ட பால்காரர் ஆச்சரியத்தில் உறைந்துபோனார்.

இந்த விலையைக் கேட்டவுடன் சுதாரித்துக் கொண்ட அந்தப் பீகார் பால்காரர், உடனடியாக ஒரு சுவாரசியமான பிசினஸ் ஐடியாவை வழங்கியுள்ளார். தனது பாலை எப்படியாவது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியுமா என்று கேட்ட அவர், வழியில் பால் கெட்டுப் போகாமல் இருக்க பெரிய பிரீசர்களை (Freezers) பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் யோசனை கூறியுள்ளார். பால்காரரின் இந்த வெள்ளந்தியான பேச்சு மற்றும் உடனடி பிசினஸ் மூளையை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

https://www.instagram.com/reel/DZhmoPWBgat/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==

இந்த வீடியோவை வெளியிட்ட பிரபாகர் பிரசாத்தின் பின்னணியும் பலருக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. பீகாரின் சிறிய கிராமத்திலிருந்து வந்து ஐஐடி மற்றும் எம்பிஏ முடித்த இவர், அமெரிக்க கார்ப்பரேட் வேலைகளில் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்குப் பிறகு, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கேயே டீக்கடை பிசினஸைத் தொடங்கி தற்போது ‘சாய் காய்’ என்று பிரபலமடைந்துள்ளார்.

Soundarya

Recent Posts

நவம்பர் 15-ல் உருமாறும் அசுர புயல்.. இந்த மாவட்ட மக்களுக்கு ரெட் அலர்ட்?…. சென்னை, ஆந்திராவுக்கு ’முரசு’ ரேஞ்ச் ஆபத்து….!

தென் கிழக்கு வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம்…

28 seconds ago

ஐயோ… வண்டியில பிரேக் போச்சுடி… என்ன மன்னிச்சுடு… மனைவியிடம் போனில் விடைபெற்று உயிரை விட்ட ஓட்டுநர்… நெஞ்சை பிளக்கும் திக் திக் வினாடிகள்…!!

பிரேக் செயலிழந்த லாரியைத் திறம்படக் கட்டுப்படுத்த முயன்றபோது நிகழ்ந்த கோர விபத்தில் ஓட்டுநர் டார்வின் கேப்ரியல் லாகோஸ் பரஹோனா பரிதாபமாக…

6 minutes ago

அய்யய்யோ… என்ன கொடுமை இது?… 19 வயது வாலிபரை தீடீரென… தூக்கி வீசிய லாரியின் சக்கரம்… நெஞ்சை பதைபதைக்கும் சிசிடிவி காட்சி…!

சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், 19 வயது வாலிபர் ஒருவர் அமைதியாக நடந்து சென்று…

13 minutes ago

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

27 minutes ago

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

49 minutes ago