கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நினைவேந்தல் கூட்டம் நடத்த தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த 41 பேரின் படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மவுன அஞ்சலி செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். கரூர் சம்பவத்தால் TVK கட்சி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததோடு, புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பை விஜய் வெளியிட்டுள்ளார்.
