பிறந்தநாளில் விடிய விடிய மது விருந்து… காரிலேயே வைத்து பெண் மேலாளர் கதற கதற … நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on மார்கழி 27, 2025

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் உதை போரில் தனியார் ஐடி நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான ஜிதேஷ் சிசோடியா தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு விருந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் அந்த நிறுவனத்தின் பெண் மேலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதில் மதுபானம் பரிமாறப்பட்டுள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடந்த நிலையில் பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து காரில் பெண் மேலாளர் ஏறிய நிலையில் அதில் தலைமை செயல் அதிகாரி ஜிதேஷ் மற்றும் பெண் உயர் அதிகாரியின் கணவர் சரோகி ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது மயக்க நிலையில் இருந்த பெண் மேலாளரை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பிறகு அவரை வீட்டில் இறக்கி விட்டுள்ளனர். மறுநாள் மயக்கம் தெளிந்த பிறகு தன்னுடைய பாலியல் பலாத்காரம் குறித்து அறிந்து கொண்ட பெண் மேலாளர் உடனே போலீசில் புகார் அளித்தார்.

   

அதில் தன்னை காரில் அழைத்துச் சென்ற போது வழியில் சிகரெட் போன்ற ஒரு பொருளை வாங்கி எனக்கு கொடுத்தனர், அதனை உட்கொண்ட பிறகு நான் மயக்கமடைந்தேன், பிறகு என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.