பெற்றோர்களே உஷார்…. இனி இது இல்லாமல் COUGH SYRUP வாங்க கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!

By Nanthini on தை 2, 2026

Spread the love

இருமல் சிரப் மருந்துகள் மற்றும் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மருந்து விதிகளில் உள்ள ஷெட்யூல் கே பட்டியலில் இருந்து சிறப்பாக மருந்துகளை நீக்குவதற்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் தொடர்புடையவர்கள் 30 நாட்களுக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த மாற்றம் அமலுக்கு வந்தால் மாத்திரைகளை போல எளிதில் சிரப் மருந்துகளை விற்க முடியாது. இந்த புதிய விதிகளின்படி இருமல் சிரப் தயாரிப்பில் கடுமையான உற்பத்தி நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

மூலப் பொருட்களின் தரம் முதல் தயாரிப்பு வரை ஒவ்வொரு கட்டமும் கண்காணிக்கப்படும். இந்த நடவடிக்கை மத்திய பிரதேசத்தில் நச்சுத்தன்மை கொண்ட இருமல் மருந்தை உட்கொண்ட இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து சிரப் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான விதிகளை மத்திய அரசு தற்போது கடுமையாக்கியுள்ளது. அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே இனி Syrup-ஐ மெடிக்கலில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.