பெற்றோர்களே உஷார்!… செல்வ மகள் திட்ட வட்டி மாறுமா?… இன்று வெளியாகும் மத்திய அரசின் அதிரடி முடிவு…!

By Swetha on புரட்டாதி 30, 2026

Spread the love

சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஒரு சிறந்த சிறு சேமிப்புத் திட்டமாகும். தற்போது ஆண்டிற்கு 8.2% கூட்டு வட்டி வழங்கும் இத்திட்டத்தில், கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய முடியும். 21 ஆண்டுகள் கழித்து முதிர்ச்சியடையும் இத்திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ 250 முதல் அதிகபட்சமாக ரூ 1.5 லட்சம் வரை சேமிக்கலாம். மேலும், இதற்கு பிரிவு 80C-ன் கீழ் EEE வரி அந்தஸ்து வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பெற்றோர்கள் ஆண்டுதோறும் ரூ 50,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் , 21 ஆண்டுகள் முதிர்வில் 8.2% வட்டி விகிதத்தின்படி ரூ 23.94 லட்சத்திற்கும் அதிகமான நிதி கிடைக்கும். அதுவே ஆண்டுக்கு ரூ 1 லட்சம் முதலீடு செய்தால் ,முதிர்வுத் தொகையாக ரூ 47 லட்சத்திற்கும் மேல் சேரும். இத்திட்டத்தில் அதிகபட்ச வரம்பான ரூ 1.5 லட்சத்தை ஆண்டுதோறும் முதலீடு செய்யும்போது , 21 ஆண்டுகளின் முடிவில் பெண் குழந்தையின் உயர் கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்காக ரூ 71.82 லட்சம் வரை கணிசமான தொகை கிடைக்கும்.

   

பொதுவாக ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு இக்கணக்கை தொடங்க அனுமதி உண்டு; இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்பட்சத்தில் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து கூடுதல் கணக்குகளைத் திறக்கலாம். இத்திட்டத்தில் இணையப் பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் ஆதார் எண் அவசியமாகும். ஆதார் எண் இல்லையெனில் பதிவு எண்ணைச் சமர்ப்பிக்கலாம், இருப்பினும் கணக்குத் தொடங்கிய 6 மாதங்களுக்குள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்கத் தவறினால், அதைச் சமர்ப்பிக்கும் வரை கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும்.