மத்திய பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி வருகின்றது. அந்த தேர்வுகளில் பல கட்டங்களில் வெற்றி பெற்ற போதும் நேர்முகத் தேர்வுக்கு பிறகு இறுதி கட்ட தகுதி பட்டியலில் இடம்பெறாத தேர்வார்களை அடையாளம் காட்டும் வகையில் பொது வெளிப்படுத்துதல் திட்டம் என்ற திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி அறிமுகம் செய்திருந்தது.
இந்த பட்டியலில் உள்ளவர்களில் இருந்து மத்திய அரசு மற்றும் தனியார் அமைப்புகள் தகுதியான நபர்களை வேலைக்கு தேர்வு செய்து வந்தன. இப்படியான நிலையில் பொது வெளிப்படுத்தல் திட்டத்தை பிரதிபா சேது என்ற பெயரில் யூ பி எஸ் சி தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதில் கடைசி கட்டத்தில் தேர்வாகாதவர்களின் விவரங்கள் வெளியிடப்படும். இந்த விவரங்களை முன்னணியின் நிறுவனங்கள் UPSC idam இருந்து முறையான அனுமதி பெற்று அவர்களை பற்றி அறிந்து திறமைக்கேற்ப வேலை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வேலைக்கு தேர்வான நபர்களுக்கு இணையான தகுதி கொண்ட நபர்களை வேலைக்கு எடுக்க இத்திட்டம் உதவுகிறது. மேலும் அந்த தேர்வர்களுக்கும் நல்ல வேலை கிடைக்க இந்த திட்டம் உதவியாக இருக்கும்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…