புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் அத்தியாவசிய மருந்துகளுக்கு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் அதீத லாபத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, விலை கட்டுப்பாட்டு வரம்பிற்குள் வராத 137 வகையான உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கு அதிகபட்சமாக 30 சதவீத லாப வரம்பு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறையின் மூலம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் சில்லறை விற்பனை விலை 70 சதவீதம் வரை குறையும் சூழல் உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புற்றுநோய் மருந்துகள் உற்பத்தி விலையை விட பன்மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால், பாதிக்கப்படும் குடும்பங்கள் சந்திக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ் அமைக்கப்பட்ட முன்னணி மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த 137 மருந்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கும் சிகிச்சைக்கான செலவு கணிசமாகக் குறையும்.
மருந்து நிறுவனங்கள் மாற்றியமைக்கப்பட்ட புதிய விலை விவரங்களை ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், வரும் நவம்பர் 9 முதல் இந்நடவடிக்கை கட்டாயமாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் வலைதளங்களிலும், மருத்துவமனைகள் மற்றும் சில்லறை விற்பனையகங்கள் தகவல் பலகைகளிலும் இந்த புதிய விலையை வெளிப்படையாகக் காட்சிப்படுத்த வேண்டும். நோயாளிகள் ‘Pharma Sahi Daam’ செயலி வாயிலாக விலையைச் சரிபார்க்க முடியும் என்பதோடு, உத்தரவு முறையாகப் பின்பற்றப்படுவதை மாநிலக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் பல கோடி சிவப்பு நண்டுகளின் வருடாந்திர இடப்பெயர்வு 2026 நவம்பர் 13 அன்று தொடங்கியது. பருவமழையின்…
ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி பகுதியில் 57 வயது முதியவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்ற…
காந்திநகர் மாவட்டத்தின் தேகாம் தாலுகாவிற்கு உட்பட்ட அங்குதலா கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா சோலங்கி (21). திருமணமான இவர் தனது கணவருடன்…
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட லலிதா கிருஷ்ணமூர்த்தி என்ற மூதாட்டி, மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில்,…
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…