ஷாக் நியூஸ்..! இனி இவர்கள் ரேஷன் கார்டில் பொருள்கள் வாங்க முடியாது..? மத்திய அரசு முக்கிய உத்தரவு..!!

By Soundarya on ஆவணி 22, 2025

Spread the love

தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகள் அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக அரிசியும், மற்ற பொருட்கள் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றது. அதேசமயம் ரேஷன் கார்டு வைத்துள்ள பயணிகளுக்கு அரசு சார்பிலும் ஏராளமான நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு கூட ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. தமிழகத்தில் சுமார் 2.26 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டம் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

ஏழைகளுக்கு மானிய விலையில் 5 கிலோ இலவச தானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வசதியான பலரும் இந்த சலுகையை பெறும் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். இதனை கண்டறிந்து நீக்கும் விதமாக, வருமானவரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட வசதி படைத்தவர்களை   கண்டறிந்துரேஷன் கார்டுகளை நீக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பலருடைய ரேஷன் கார்டுகள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.