யாரும் எதிர்பார்க்காத திருப்பம்… சிலிண்டர் விதிகளில் மத்திய அரசு செய்த அதிரடி மாற்றம் … இனி 35 நாட்கள் காத்திருக்க வேண்டுமா?… இதோ புதிய விதிமுறைகள்..!!!

By Rajeshwari on பங்குனி 25, 2026

Spread the love

மத்திய அரசு மற்றும் எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளன. எரிவாயு விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கறுப்புச் சந்தை விற்பனையைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, சாதாரண வாடிக்கையாளர்கள் 14.2 கிலோ சிலிண்டர் ஒரு டெலிவரி செய்யப்பட்ட நாளிலிருந்து அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 முதல் 35 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.

இது குறிப்பாக, இரண்டு சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் 35 நாட்களுக்குப் பிறகே அடுத்த பதிவைச் செய்ய முடியும். இந்த கால இடைவெளிக்கு முன்பாக செய்யப்படும் பதிவுகள் தானாகவே ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஏழை எளிய மக்களுக்கான காத்திருப்பு காலம் 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறிய ரக 5 கிலோ சிலிண்டர்களுக்கு 9 முதல் 16 நாட்களும், 10 கிலோ சிலிண்டர்களுக்கு 18 முதல் 32 நாட்களும் இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

   

இதனால் ஈரான் போர் போன்ற சர்வதேச சூழல்களால் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைக்கவும், நுகர்வைக் கட்டுப்படுத்தவும் இந்த இரண்டாவது கட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறையால் குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள நுகர்வோர் சிக்கனமாக எரிவாயுவைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலதிக விவரங்களுக்கு 1800-2333-555 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.