தொழில் தொடங்க இனி வங்கியில் கடன் வாங்க வேண்டாம்.. குறைந்த வட்டியில் அரசே கடன் வழங்கும் சூப்பரான திட்டங்களின் லிஸ்ட் இதோ..!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் விலைவாசி உயர்வு என்பது மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. தொழில் செய்வதற்கோ, வீடு கட்டவோ, உயர்கல்வி அல்லது திருமணம் செய்வதற்கோ பெரிய அளவில் பணம் தேவைப்படுகின்றது. இதற்காக நிறைய பேர் வங்கிகளில் நேரடி கடன் வாங்குகிறார்கள். அங்கு வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். இதனால் மக்கள் பலரும் சிரமப்படும் நிலையில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சில திட்டங்கள் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

மக்களின் சிரமத்தை போக்குவதற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் தான் முத்ரா யோஜனா. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடவும் குடிமக்களுக்கான சிறப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் மூன்று பிரிவுகள் உள்ளது. ஷிஷு என்ற பிரிவின் கீழ் 50000 கடன் வழங்கப்படுகிறது, கிஷோர் என்ற பிரிவின் கீழ் 50000 முதல் 5 லட்சம் ரூபாய் வரையும், தருண் என்ற பிரிவின் கீழ் 5 லட்ச முதல் 10 லட்சம் ரூபாய் வரையும் கடன் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு எந்த பிணயமும் அல்லது உத்திரவாதமோ தேவையில்லை. இதற்கான வட்டி விகிதமும் மிக குறைவு தான்.

அதனைப் போலவே ஸ்டாண்டர்ட் இந்தியா என்ற திட்டம் பெண் தொழில் முனைவோருக்கான சிறந்த திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் புதிய தொழில் தொடங்க 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இது பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தொழில் தொடங்க ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகின்றது

மாநில அரசுகளால் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பூஜ்ஜிய வட்டி அல்லது மிக குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் குடிசைத் தொழில்கள் அல்லது சிறு தொழில்களுக்கு பெண்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

அடுத்ததாக விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மூலமாக விவசாயிகள் செலவுக்காக 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கான வட்டியும் மிக குறைவு தான். கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தினால் சில நேரங்களில் பூஜ்ஜிய சதவீத வட்டி விகித நன்மையை கூட விவசாயிகள் பெற முடியும்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago