ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, சிமெண்ட் மற்றும் கட்டுமானக் கம்பிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சிமெண்ட் தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் வளைகுடா நாடுகளில் இருந்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, நாளை முதல் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ₹50 முதல் ₹70 வரை உயரும் எனத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதேபோல், கட்டுமானக் கம்பிகளின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு டன் கம்பியின் விலை ₹2,000 வரை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள இந்த போர்ச் சூழல், கட்டுமானத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதனால் வீடு கட்டுபவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூடுதல் சுமையைச் சுமக்க நேரிடும் என்றும் அஞ்சப்படுகிறது.
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த நான்கு முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட சீட் வழங்க…
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…