அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி தனது கட்சிப் பதவியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். 2016 முதல் 2021 வரை சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றிய அவர், கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது சாத்தியமற்றது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர்களை “நயவஞ்சகர்கள்” என்று கடுமையாகச் சாடியுள்ள அவர், உள்ளூர் அரசியலில் நிலவும் கசப்பான சூழலே தனது இந்த முடிவுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் அதிமுகவிலிருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த நிலையில், இன்று பி.வி.பாரதியின் இந்த அறிவிப்பு அதிமுக தலைமைக்கு அடுத்தடுத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது. தேர்தலை எதிர்நோக்கியுள்ள சூழலில், கட்சியின் சீனியர் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர்பின் ஒருவராக அதிருப்தியில் வெளியேறுவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.வி.பாரதியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், இது டெல்டா மாவட்ட அதிமுக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…