பெற்றோர்களே உஷார்..! அதிக நேரம் செல்போன் பார்த்த சிறுமி… அடுத்து நடந்த பயங்கரம்… உறைய வைக்கும் சிசிடிவி காட்சி வைரல்..!

By Soundarya on பங்குனி 12, 2026

Spread the love

வீட்டில் சிறுமி ஒருத்தி செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென அந்த போன் வெடித்துச் சிதறிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தின்போது போனில் இருந்து திடீரென தீப்பொறிகள் கிளம்பி, அடுத்த சில நொடிகளில் பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, போன் வெடிப்பதற்குச் சில வினாடிகளுக்கு முன்பே ஏதோ விபரீதம் நடக்கப்போவதை உணர்ந்த அந்தச் சிறுமி, போனைத் தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. நீண்ட நேரம் தொடர்ந்து கேம் விளையாடியதால் மொபைல் போன் அதிக வெப்பமடைந்ததே (Overheating) இந்த வெடிப்புக்குக் காரணம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, தரமற்ற பேட்டரிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சார்ஜ் போட்டபடி போனைப் பயன்படுத்தக்கூடாது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

   

சமீபகாலமாகச் சிறுவர்கள் மத்தியில் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த வீடியோ பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுக்கும்போது போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், போன் சூடாகும்போது அதைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது