Categories: சினிமா

நண்பன் விவேக்கின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மிக பெரிய விஷியத்தை தொடங்கிய செல் முருகன்.. வைரலாகும் வீடியோ..

Spread the love

தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் விவேக்கின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் செல் முருகன் செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி  வருகிறது. மறைந்த காமெடி நடிகர் விவேக்கை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. தன்னுடைய ஒவ்வொரு காமெடி மூலமும் ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டும் இன்றி சிந்திக்கவும் வைத்தவர்.

நடிகர் விவேக் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு டப்பிங் மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பைத் தாண்டி மிகவும் பிரபலமான குளிர்பானமாக இருந்த  மிராண்டா மற்றும் பிரபல நகை நிறுவனம் ஒன்றிலும் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் விவேக் இருந்துள்ளார்.  இவர் தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருக்கிறார். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது.

அதற்குள் 2021 ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.

விவேக்கின் இறப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தினாலும் நடிகர் செல் முருகனுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு தான். செல் முருகன் 26 ஆண்டுகளாக விவேக்குடன் இருக்கிறார். விவேக் படங்களில் நிச்சயம் செல் முருகன் இடம்பெற்று விடுவார். சினிமாவை தாண்டி இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதோடு விவேக்கின் இறப்பிற்கு பின்னரும் விவேக்கை மறக்காமல் தொடர்ந்து பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார் செல்முருகன்.

இந்நிலையில் இன்று மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம்.  இதையொட்டி அவரின் நெருங்கிய நண்பரான செல் முருகன், நடிகர் வைபவின் 27 வது படமான  ‘வைபவ் 27’ படக்குழுவில் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கியுள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ  சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த பலரும் செல் முருகனுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பாராட்டியும் வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..

Begam

Recent Posts

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

5 minutes ago

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

17 minutes ago

வயசான காலத்துல இது தேவையா..? “சட்டை பட்டனை போடுங்க..” ஆபாசமாக பேசிய நபருக்கு விமானப்படை அதிகாரி கொடுத்த மாஸ் பதிலடி..!!

பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…

23 minutes ago

KG படிக்க ரூ.2.25 லட்சமா..? “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” தானே சொல்லி கொடுப்பாங்க… எல்.கே.ஜி கட்டணத்தைப் பார்த்து தலைசுற்றிப்போன நெட்டிசன்கள்..!!

இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…

28 minutes ago

நெகிழ்ச்சி..! 3 மாதக் குழந்தையைத் தன் குட்டி என நினைத்து தூக்கிச்சென்ற குரங்கு… ஒன்றரை மணி நேரம் அரவணைத்த அதிசயம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…

33 minutes ago