#image_title
2024-ல் வருடம் முடிவடைய இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ளது இந்த வருடத்தில் பல சம்பவங்கள் நடந்திருக்கும் நிலையில் கோலிவுட் முதல் பாலிவுட் அனைத்து மே ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த வருடம் இந்திய அளவில் தாய்மை அடைந்த பரபலங்கள் குறித்து பார்க்கலாம்.
பிரபல நடிகை அமலாபால் ஜெகத் தேசாய் என்பவரை கடந்த வருடம் நவம்பர் மாதம் இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்த ஜூன் 11ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய குழந்தைக்கு இலாய் என்ற பெயரிட்டுள்ளார்கள். இவர் முன்னதாக கர்ப்பகால வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்நதார். தற்போது தன்னுடைய குழந்தை புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
Youtube பிரபலம் இர்பான் மற்றும் ஆசிபா தம்பதிக்கு இந்த வருடம் தான் குழந்தை பிறந்தது. இவர்களும் தங்களுடைய கர்ப்பகால புகைப்படங்களை பகிர்ந்தார்கள். குழந்தையின் பாலினம் குறித்து பேசி சர்ச்சையிலும் சிக்கனார் இர்பான். இதனையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். இந்த விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இந்த ஜோடிக்கு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி அவர் சொன்னபடி பெண் குழந்தை பிறந்தது.
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்க்கிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இவர்கள் இந்த வருடம் முதல் குழந்தை பெற்றுள்ளார்கள். கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்தத.
சூப்பர் ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கும் வருண் தவானுக்கும் நடாஷா தலால் என்பவருக்கும் திருமணமான நிலையில் இந்த வருடம் குழந்தை பிறந்துள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஜூன் மூன்றாம் தேதியன்று பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு லாரா என்று பெயரிட்டுள்ளார்கள்.
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…
பெங்களூரில் காதலை வெளிப்படுத்துவதாகக் கூறி, காதலனை வீட்டிற்கு வரவழைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…