பதறவைக்கும் திருப்பம்…. காதலனைச் சந்திக்கச் சென்ற 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… காட்டில் கண்டெடுக்கப்பட்ட உடல்….!

By Nanthini on ஐப்பசி 8, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், காதலனைச் சந்திக்கச் சென்று காணாமல்போன 17 வயது சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி தனது உறவினர் வீட்டில் இருந்து வெளியேறிய அச்சிறுமி வீடு திரும்பாததால் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்த போலீசார், தொலைபேசி அழைப்புப் பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி அங்கித் மால்வியா என்ற இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், செப்டம்பர் 30 அன்று அங்கித்தின் அழைப்பை ஏற்றுச் சென்ற சிறுமி, அவருடன் பியோரா பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து மரக்கட்டை அறுக்கும் ரம்பம் மற்றும் கயிறு ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கொலைக்குப் பிறகு அங்கித் தனது உறவினர் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்த விபரங்களைக் கூறிய நிலையில், அந்த அழைப்புப் பதிவுகளின் அடிப்படையிலேயே போலீசார் காட்டுப்பகுதிக்குச் சென்று, காணாமல்போன 7 நாட்களுக்குப் பிறகு சிறுமியின் சிதைந்த உடலைக் கண்டெடுத்தனர்.

   

சிறுமியைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் அங்கித், சம்பவ இடத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றபோது லாரி மீது மோதி விபத்தில் உயிரிழந்தார். முக்கிய சந்தேக நபர் உயிரிழந்துவிட்டதால், அவரிடம் நேரடியாக விசாரணை நடத்த முடியாத சூழல் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கொலை நடப்பதற்கு முன்பும் பின்பும் அவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள் மற்றும் உறவினரிடம் அவர் அளித்த வாக்குமூலம் ஆகியவை வழக்கில் மிக முக்கியமான தடயங்களாக மாறியுள்ளன.

   

இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த காதல் உறவு கொலையில் முடிந்தது ஏன் என்பதற்கான துல்லியமான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்று ராஜ்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் தோலானி தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா, காட்டுப்பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றதன் பின்னணி என்ன என்பது குறித்துக் கிடைக்கும் தடயங்களைக் கொண்டு போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.