நாடு முழுவதும் உள்ள அனைத்து CBSE பள்ளிகளுக்கான கல்வி செயல் திறன் அட்டை (ரிப்போர்ட் கார்டு) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித்திறன் விவரங்கள் பாடவாரியாக ரிப்போர்ட் கார்டில் இடம் பெற்று இருக்கும். இதன் மூலம் மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளனர் என அறிந்து கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
