சூப்பர் குட் நியூஸ்..! 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதலாம்… ஒப்புதல் அளித்த CBSE நிர்வாகம்..!!!

By Soundarya on ஆவணி 11, 2025

Spread the love

சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக 9 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இதற்கு சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி வரக்கூடிய 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதல் கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு பருவத்துக்கும் மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல் மற்றும் சமூகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு மூன்று எழுத்து தேர்வுகள் நடத்தப்படும்.

இதன் மூலம் இனி 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கான பாடத்திட்டங்களை மனப்பாடம் செய்ய வேண்டாம். அவர்கள் பாடப் புத்தகங்கள் மற்றும் நூலகங்களில் எடுத்த குறிப்புகள் அல்லது பள்ளி சார்பில் வழங்கிய குறிப்புகள் உள்ளிட்டவற்றை தேர் வரைக்கு எடுத்துச் சென்று அதனை பார்த்து தேர்வு எழுதலாம்.