கரூர் துயர வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளின் அக்டோபர் 13 திங்கட்கிழமை அன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிறப்பு குழு விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் தமிழக வெற்றி கழகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்குகளின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் நாளை மறுநாள் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
