கள ஆய்வில் வெளிவந்துள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்களின்படி, திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் மீது கடுமையான சாதி பாகுபாடு மற்றும் நிதி முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. சில அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களின் சொந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கே கட்சிப் பதவிகளை வாரி வழங்கியதோடு, சாதி ரீதியாக செயல்படும் மாவட்ட செயலாளர்களைப் பாதுகாப்பதிலேயே முழு மூச்சாக இருந்துள்ளனர் என்றும், அதே வேளையில் மாற்று சாதியினரை திட்டமிட்டு ஓரங்கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கெல்லாம் மேலாக, தேர்தல் பணிகளுக்காகவும் செலவுகளுக்காகவும் தலைமை வழங்கிய நிதியை, சில அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் அடிமட்டத் தொண்டர்களுக்குக் கொண்டு சேர்க்காமல் தங்களுக்குள்ளேயே அமுக்கிக் கொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தற்பொழுது அறிவாலய வட்டாரத்திலும், கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
