தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள ஷாமிர்பேட் மண்டலத்தின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வட்டாட்சியர் மற்றும் இணை சார்பதிவாளரான தும்மகொம்மா சுசரிதா என்பவர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. சுசரிதா மற்றும் அவரது உறவினர்கள், உதவியாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப் பணம், தங்கம் மற்றும் வைர நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுசரிதாவுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, சுமார் 12 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 1.20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள், 38 லட்சம் ரூபாய் வங்கி வைப்புத்தொகை ற்றும் வோக்ஸ்வாகன், ஹூண்டாய் கிரெட்டா ஆகிய இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, ஹைதராபாத்தில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்புகள் (Flats), இரண்டு வீட்டு மனைகள் மற்றும் சித்திபேட் மாவட்டத்தில் உள்ள 2 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளின் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சொத்துகளின் மொத்த ஆவண மதிப்பு சுமார் 5.05 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டாலும், அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு பல மடங்கு அதிகமாக இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த மே மாதம் நில விவகாரம் ஒன்றில் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, அதில் முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாயை வாங்கியபோது சுசரிதா ஊழல் தடுப்புப் பிரிவினரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்தப் புகாரைத் தொடர்ந்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்திருப்பது இந்தச் சோதனையில் அம்பலமாகியுள்ளதால், அவர் மீதான பிடி மேலும் இறுகியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…